உள்ளூர் செய்திகள்

வெள்ளகோவில் பஸ் நிலைய ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

வெள்ளகோவில் பஸ் நிலைய சாலையில் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2023-04-28 11:44 GMT   |   Update On 2023-04-28 11:44 GMT
  • குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக நீர் ஒடிய காரணத்தால் தார் ரோடு சேதம் அடைந்து பெரிய பள்ளமாகியுள்ளது.
  • அவ்வப்போது விபத்துகள் நடைபெறுகின்றன.

வெள்ளகோவில் :

வெள்ளகோவிலில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையின் ஒரத்தில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக நீர் ஒடிய காரணத்தால் தார் ரோடு சேதம் அடைந்து பெரிய பள்ளமாகியுள்ளது. இந்த வழியாக அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வந்து செல்கின்றன. மேலும் அந்த பகுதியில் உள்ள கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இதனை தவிரவும் ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் வரும் சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் சென்று வருவது என்று எப்போதும் பரபரப்பாக இந்த ரோடு காணப்படும்.

பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் விநாயகர் கோவில் அருகே சதுர வடிவில் ஒரு அடி பள்ளம் உள்ளது. ரோட்டின் காணப்படுவாதல் இருசக்கர மற்றும் கார்களில் வருபவர்களுக்கு தூரத்தில் தெரிவதில்லை. மிக அருகில் வரும்பொழுது தான் தெரிகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகள் நடைபெறுகின்றன. அதிகளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் வரும் போது இதில் சீக்கி கீழே விழுந்து பலத்த காயமடைந்து வருகின்றனர். இது தொடர்கதையாக நடந்து வருகிறது. ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News