உள்ளூர் செய்திகள்

உடுமலை அரசு பள்ளி மாணவிகள் சாதனை

Published On 2022-12-21 05:35 GMT   |   Update On 2022-12-21 05:35 GMT
  • முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.
  • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

உடுமலை : 

திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். 9 மற்றும் 10ம் வகுப்பு பிரிவுகளில் மனிதநேயம் பாடல் மற்றும் தலைப்பை ஒட்டி வரைதல், கவிதை புனைதலில் முதலிடமும், ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனம், தனி ஆங்கிலம் செவ்வியல் பாடல் தனி ஓவியம் வரைதலில் 2ம் இடமும் , செவ்வியல் நடன குழு , மேற்கத்திய நடன குழு,  நாட்டுப்புறப் பாடல் , தனி காகித வேலைப்பாடு ஆகியவற்றில் 3ம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நடனத்திற்கு பயிற்சி அளித்த பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் விஜயலட்சுமி மற்றும் இசை ஆசிரியர் கஜலட்சுமி ஓவிய ஆசிரியர் லாவன்யா ,தமிழாசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் விஜயா பாராட்டு தெரிவித்தார். முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

Tags:    

Similar News