உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திருப்பூர் வணிக வரி கோட்ட அலுவலகம் விரைவில் திறப்பு அதிகாரி தகவல்

Published On 2023-06-29 07:09 GMT   |   Update On 2023-06-29 07:09 GMT
  • வருவாய் மாவட்ட பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று வணிக வரி மாவட்டங்களுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • வணிக வரி வசூல் நிலவரம்,வணிக வரி சார்ந்த பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

திருப்பூர்:

ஈரோடு கோட்டத்தின் கீழ் திருப்பூரில் உள்ள 2 வணிக வரி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. வருவாய் மாவட்ட பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று வணிக வரி மாவட்டங்களுடன் திருப்பூர் வணிக வரி கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

கோட்ட அலுவலகம் செயல்பட அவிநாசி அருகே கைகாட்டிப்புதூரிலுள்ள ஏ.இ.பி.சி.,க்கு சொந்தமான கட்டடம் வாடகைக்கு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கோட்ட வணிக வரித்துறை இணை கமிஷனர் லட்சுமி பாக்கியா தனீரு, திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வரி துணை கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் வணிக வரி மாவட்ட துணை கமிஷனர் முருககுமார் மற்றும் உதவி கமிஷனர்கள், வணிக வரி அலுவலர்கள் பங்கேற்றனர். வணிக வரி வசூல் நிலவரம்,வணிக வரி சார்ந்த பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து கேட்டறிந்தார். அலுவலக செயல்பாடுகளை பார்வையிட்டு ஆவணங்களை தணிக்கை செய்தார்.

திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ரவி உட்பட நிர்வாக குழு உறுப்பினர்கள், இணை கமிஷனரை சந்தித்து வணிக வரி கோட்ட அலுவலகத்தை விரைவில் திறக்கவேண்டும்.ஆர்டர் குறைவால், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றன. இதனால் வரி செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. வரி வசூலில், அதிகாரிகள் கடுமைகாட்டக்கூடாது என வரி பயிற்சியாளர் கூட்டமைப்பினர் இணை கமிஷனரிடம் தெரிவித்தனர்.

ஆய்வு குறித்து இணை கமிஷனரிடம் கேட்டபோது, இது வழக்கமான ஆய்வுதான். திருப்பூரில் வணிக வரி கோட்ட அலுவலகம் செயல்பட உள்ள கட்டடத்தை பார்வையிட்டுள்ளோம். அரசு உத்தரவு வந்தவுடன், விரைவில் கோட்ட அலுவலகம் செயல்பாட்டை தொடங்கும் என்றார்.

Tags:    

Similar News