உள்ளூர் செய்திகள்

திருப்பூர் அய்யப்பன் கோவிலில் அன்னதானம்

Published On 2022-12-13 05:25 GMT   |   Update On 2022-12-13 05:25 GMT
  • 63ம் ஆண்டு மண்டல பூஜை விமரிசையாக நடந்து வருகிறது.
  • மண்டல பூஜை விழாவை தொடர்ந்து தினமும் மாலை 6:45 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

திருப்பூர் :

திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், 63ம் ஆண்டு மண்டல பூஜை விமரிசையாக நடந்து வருகிறது. ஆராட்டு உற்சவம், ஊர்வலம் நிறைவடைந்துள்ளது.

மண்டல பூஜையை தொடர்ந்து கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.நான்காவது வார அன்னதானம் நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் நடந்தது. ஸ்ரீசபரி ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அவல் பாயாசம், போண்டாவுடன் அறுசுவை உணவு பறிமாறப்பட்டது. பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அன்னதானத்தில் பங்கேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள கரசேவகர்கள், மாலை வரை அன்னதானம் வழங்கும் பணியை தொடர்ந்தனர்.

ஸ்ரீஅய்யப்பன் பக்தஜன சங்கம், ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மண்டல பூஜை விழாவை தொடர்ந்து தினமும் மாலை 6:45 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

Tags:    

Similar News