உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தபால் நிலையங்களில் முதியவர்கள் வரிசையில் நிற்காமல் சேவைகளை பெறலாம்

Published On 2022-11-23 06:22 GMT   |   Update On 2022-11-23 06:22 GMT
  • குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து முதியவர்களுக்கு தனி கவுன்டர் வேண்டும் என புகார் மனு
  • 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரிசையில் நிற்காமல் சேவை வழங்கும் நடைமுறையை கண்டிப்புடன் தபால் நிலையங்கள் பின்பற்ற வேண்டும்;

திருப்பூர்

தபால்நிலையங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்கள், அனைத்து வகையான பரிவர்த்தனையையும், வரிசையில் நிற்காமல் பெறலாம். இதற்கு தங்கள் வயது சான்றிதழை சமர்ப்பித்தால் போதும் என தபால்துறை தெரிவித்திருந்தது.

ஆனால் பெரும்பாலான தபால்நிலையங்கள், இந்த நடைமுறையை முறையாக பின்பற்றுவதில்லை. இதனால் முதியவர்களுக்கு இப்படி ஒருநடைமுறை இருப்பதேதெரியவில்லை. இந்நிலையில் குறைதீர் கூட்டங்களில் தொடர்ந்து முதியவர்களுக்கு தனி கவுன்டர் வேண்டும் என புகார் மனுக்கள்தபால்துறைக்கு அதிகம் வருகின்றன.

இதைத்தொடர்ந்து 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வரிசையில் நிற்காமல் சேவை வழங்கும் நடைமுறையை கண்டிப்புடன் தபால் நிலையங்கள் பின்பற்ற வேண்டும்; இதுகுறித்து பொதுமக்கள் அறியும் வகையில், அனைத்து தபால்நிலையங்களிலும் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்று தமிழக தபால் வட்டம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News