உள்ளூர் செய்திகள்

காவல்துறையினர் கடையை சீல் செய்த காட்சி.

சட்டவிரோதமாக புகையிலை- மது விற்ற கடைக்கு சீல் வைப்பு

Published On 2023-07-09 10:06 GMT   |   Update On 2023-07-09 10:06 GMT
  • புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
  • காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில், திருப்பூர் மெயின் ரோட்டில் ஆனந்தராஜ் என்பவரது மகன்கள் பாக்கியநாதன்(34), பெரிய ராஜ்(32) ஆகியோர் மளிகை கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக போலீசார் அங்கிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இதே போல உணவு பாதுகாப்புத் துறையினர் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்த மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட புகையிலை பொருட்கள் தடுப்புக்குழுவின் பரிந்துரையின் பேரில், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட குழுவினர், தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.

Tags:    

Similar News