உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள பள்ளி மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2023-08-26 06:53 GMT   |   Update On 2023-08-26 06:53 GMT
  • வினாடி-வினா எழுத்துத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ளது.
  • வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும்.

திருப்பூர்:

இந்திய தபால் துறை சார்பாக பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் தீன்தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற ஊக்கத்தொகை திட்டம் அகில இந்திய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த ஊக்கத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முதல்கட்டமாக வினாடி-வினா எழுத்துத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி அகில இந்திய அளவில் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பிக்க வருகிற 6-ந் தேதி கடைசிநாளாகும். தகுதியான மாணவ-மாணவிகள் அருகில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு dotirupur.tn@indiapost.gov.in என்ற இணையதளத்திலும் 0421 2239785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதில் வெற்றி பெற்றவர்கள் தபால் தலை தொடர்பான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் புராஜக்ட் சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் அவர்களுடைய அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும். இந்த தொகை அவர்களின் 9-ம் வகுப்பு பள்ளி படிப்பு முடியும் வரை வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News