உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்ஸ் மூலம் மனு கொடுக்க வந்த பிரியா. 

இன்சூரன்ஸ் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிஆம்புலன்ஸ் மூலம் வந்து மனு கொடுத்த பெண்

Published On 2023-09-11 10:50 GMT   |   Update On 2023-09-11 10:50 GMT
  • கால்வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சை பெற்றேன்.
  • எனது தாயார் இறந்து விட்டார். தந்தைக்கு வயதாகி விட்டது.

திருப்பூர்:

திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் வஞ்சிநகரை சேர்ந்த பிரியா என்பவர் இன்று ஆம்புலன்ஸ் மூலம் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி தனியார் பஸ் மூலம் விபத்து ஏற்பட்டு 3 மாதம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். 7 வருடங்கள் ஆகியும் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை. தங்களின் உதவி மூலம் கிடைத்த வீரபாண்டி குடியிருப்பு வாரியத்தில் 2-ம் மாடியில் வசித்து வந்தேன்.

ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் மீண்டும் கால்வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சை பெற்றேன். எனது தாயார் இறந்து விட்டார். தந்தைக்கு வயதாகி விட்டது. இதனால் எனது சித்தி வீட்டில் வசித்து வருகிறேன். நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் செலவுகள் செய்து வருகிறோம்.

எனவே நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவும் ,குடியிருப்பில் கீழ் பகுதியை ஒதுக்கி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News