உள்ளூர் செய்திகள்

 மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக கொடியேற்றப்பட்டிருப்பதை படத்தில் காணலாம். 

மீன் வியாபாரிகள் நல சங்கம் சார்பில் குடியரசு தினவிழா

Published On 2023-01-26 16:11 IST   |   Update On 2023-01-26 16:11:00 IST
  • திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
  • மாவட்ட அவைத்தலைவர் முகமதுஅலி இனிப்புகளை வழங்கினார்

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டத்தலைவர் பார்த்தசாரதி தலைமையில் மாவட்டசெயலாளர் கோடை சே. அப்துல் காதர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட அவைத்தலைவர் முகமதுஅலி இனிப்புகளை வழங்கினார் . இந்நிகழ்ச்சிக்கு மாவட்டசெயற்குழு அப்துல்ரகிம், மாவட்ட இணைசெயலாளர் செல்வா சேக்முகமது ,மாநகர தலைவர் ஜபருல்லா, மாநகரச்செயலாளர் ரகுமத்துல்லா ,மாநகரபொருளாளர் ராஜாமுகமது மற்றும் உறுப்பினர்கள் கணேசமூர்த்தி ,சம்சுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்து நன்றி கூறினார்.

Tags:    

Similar News