உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ராக்கியாபாளையம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-07-07 06:48 GMT   |   Update On 2022-07-07 06:48 GMT
  • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும்.

திருப்பூர் :

திருப்பூர் நல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) செவந்தாம்பாளையம், ஆர்.வி.இ.நகர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும்.

எனவே செவந்தாம்பாளையம், கணபதிபாளையம், இந்திராநகர், பட்டத்தரசியம்மன் நகர், ராக்கியாபாளையம், மணியக்காரம்பாளையம் ரோடு, ஆர்.வி.இ.நகர், எம்.சி.நகர், பச்சியப்பா நகர், வள்ளியம்மை நகர், பொன்நகர், ராக்கியாபாளையம் பிரிவு, சேரன் நகர், காளியப்பா நகர் பகுதிகளில் நாளை மின்சாரம் தடைபடும். இந்த தகவலை திருப்பூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News