உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

குண்டம் திருவிழாவை முன்னிட்டு பெருமாநல்லூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2023-04-03 10:05 GMT   |   Update On 2023-04-03 10:05 GMT
  • புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லுாருக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
  • பெருமாநல்லுாருக்கு பயணி ஒருவருக்கு 14 ரூபாய் கட்டணமும் சிறப்பு பஸ்களில் வசூலிக்கப்படும்.

திருப்பூர்:

பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் நாளை 4-ந்தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் நாளை காலை வரை திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

திருப்பூர் மத்திய மற்றும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லுாருக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நாளை நடக்கிறது.இதையொட்டி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அவிநாசி, புளியம்பட்டி, பவானிசாகர், ராஜன் நகர் வழியாக பண்ணாரிக்கு 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

பண்ணாரிக்கு பயணி ஒருவருக்கு 68 ரூபாய் கட்டணமும், பெருமாநல்லுாருக்கு பயணி ஒருவருக்கு 14 ரூபாய் கட்டணமும் சிறப்பு பஸ்களில் வசூலிக்கப்படும்.நிர்ணயிக்கப்பட்டதை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தால் பயணிகள் பணியில் உள்ள இயக்க குழுவினரிடம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமான பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்பவை. சிறப்பு பஸ் புறப்படுமிடத்தில் இருந்து கிளம்பி சேருமிடம் சென்று தான் நிற்கும். இடையே 'ஸ்டேஜ்' கிடையாது.இதனால் இத்தகைய பஸ்களில் சிறப்பு சலுகைகளுக்கு அனுமதியில்லை. சிறப்பு பஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்படும் பஸ்களில் மகளிருக்கும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். அதே நேரம் வழக்கமான டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றனர்.

Tags:    

Similar News