உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

நூல் ஆர்டர் இல்லாத நேரத்தில் பஞ்சு விலை குறைந்தும் பயன் இல்லை - நூற்பாலைகள் கவலை

Update: 2023-05-27 10:51 GMT
  • ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு 1.05 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டது.
  • பருத்தி சீசன் முடியும் நிலையில் வரத்து அதிகமாக இருக்கிறது.

திருப்பூர்:

கடந்த பருத்தி ஆண்டில் (2021 அக்டோபர் - 2022 செப்டம்பர்), செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வரலாறு காணாத அளவுக்கு பஞ்சு விலை உயர்த்தப்பட்டது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு 1.05 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டது.பருத்தி சீசன் துவங்கிய பின்7 மாதங்களாக 70 ஆயிரம் முதல் 62 ஆயிரம் ரூபாய் வரை விலை நீடித்தது. நாளுக்கு நாள் ஜவுளி உற்பத்தி குறைவதால், நூலுக்கான தேவையும் குறைந்தது.பஞ்சுக்கு கிராக்கி இல்லாததால் தற்போதைய நிலவரப்படி ஒரு கேண்டி பஞ்சு 58 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.

காத்திருந்த விவசாயிகள் ஜனவரி மாதத்துக்கு பின் மார்க்கெட் வர துவங்கினர். சீசன் நிறைவடைய உள்ள நிலையில் தினமும் 1.05 லட்சம் பேல் வரை விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது.ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி குறைந்ததால் நூற்பாலைகள் நூல் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வரத்து அதிகமாக இருப்பதால் பஞ்சு விலை மேலும் சரிய துவங்கியுள்ளது. இருப்பினும்,நூல் ஆர்டர் இல்லாத நேரத்தில் பஞ்சு விலை குறைந்தும் பயனில்லையென நூற்பாலைகள் கவலை அடைந்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர்கள் (டாஸ்மா) சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:-

பருத்தி சீசன் முடியும் நிலையில் வரத்து அதிகமாக இருக்கிறது. ஒரு கேண்டி 58 ஆயிரம் ரூபாயாக விலை குறைந்துள்ளது. ஆர்டர் இல்லாததால் நூற்பாலைகள் 50 முதல் 70 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்துள்ளன. பஞ்சு விலை குறைந்தும் பிரயோஜனம் இல்லை.பஞ்சு வாங்கி இருப்பு வைக்கவோ,நூல் உற்பத்தி செய்து இருப்பு வைக்கவோ, நூற்பாலைகள் பொருளாதார ரீதியாக தயாரில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News