உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அமராவதிபாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

Published On 2022-11-01 12:58 IST   |   Update On 2022-11-01 12:58:00 IST
  • கொரோனா காரணமாக தொடர்ந்து 18 வாரங்கள் சந்தை நடக்காத நிலையில் நடப்பாண்டு மீண்டும் உயிர்ப்பெற்று சந்தை நடந்து வருகிறது.
  • தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூரில் 1945 முதல் கால்நடைச்சந்தை நடந்து வருகிறது. தென்னம்பாளையத்தில் நடந்து வந்த மாட்டுச்சந்தை தற்போது அமராவதிபாளையத்தில் நடந்து வருகிறது.வாரம் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் சந்தைக்கு ஆயிரம் முதல் 1,500 மாடுகள் கொண்டு வரப்படுகிறது. இவற்றை விலை பேசி வாங்க 2,500 பேர் வருகின்றனர். கேரளாவில் இருந்தும் திருப்பூருக்கு வியாபாரிகள் வருகின்றன்ர. உள்ளூர் வியாபாரிகளை விட, வெளிமாவட்ட, கேரள வியாபாரிகள் நம்பியே சந்தை நடக்கிறது. திங்கட்கிழமை காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4மணி வரை திருவிழா போல சந்தை நடக்கிறது. குறைந்தபட்ச விலை 3,000 ரூபாய் துவங்கி, அதிகபட்சம், 55 ஆயிரம் வரை மாடுகள் விலை போகிறது. காங்கயம் காளைகள் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படும்.

சந்தைக்கு 800 முதல் ஆயிரம் கால்நடைகள் கொண்டு வரப்படுவதால் குறைந்தபட்சம் 80 லட்சம் முதல் 1.50 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது. கடந்த 2019ல் 50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. கொரோனா காரணமாக தொடர்ந்து 18 வாரங்கள் சந்தை நடக்காத நிலையில் நடப்பாண்டு மீண்டும் உயிர்ப்பெற்று சந்தை நடந்து வருகிறது.

அரை நூற்றாண்டு கடந்தும் செயல்பட்டு வரும் இச்சந்தைக்கு பல்வேறு மாநிலத்தவர் வந்து செல்ல தேவையான அனுமதி, போக்குவரத்து வசதி அமைந்தால், திருப்பூரில் கால்நடை வணிகம் மேலும் சிறக்கும். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

கால்நடை விலை நிர்ணயத்துக்கு குழுவெல்லாம் கிடையாது. விவசாயி - வியாபாரி அல்லது இரு வியாபரிகள் இடையே நடக்கும் ஒரு நிமிடம் பேரம் மட்டுமே விலை. படிந்து விட்டால் விலையை கொடுத்து மாட்டை கயிறுடன் அவிழ்த்து லாரியில் ஏற்றிவிடுவார்கள். சுவராசியமான வாக்குவாதங்களும் நடக்கும். 50 ஆயிரத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை சர்வசாதாரணமாக சட்டை, டவுசர் பாக்கெட்டில் வியாபாரிகள் பணம் வைத்திருப்பார்கள்.   

Tags:    

Similar News