உள்ளூர் செய்திகள்

காங்கயம் - தாராபுரம் சாலையில்  சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் காட்சி. 

மாலைமலர் செய்தி எதிரொலி காங்கயம்-தாராபுரம் சாலை விரிவாக்க பணிகள் தொடக்கம்

Published On 2023-10-11 07:37 GMT   |   Update On 2023-10-11 07:38 GMT
  • பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
  • தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

காங்கயம்:

மத்திய அரசின் சாலை பராமரிப்பு மற்றும் விரிவாக்க திட்டப்பணிகளின் ஒரு கட்டமாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற சாலைகளை கண்டறிந்து அதனை சுகாதார முறையில் பேணி காக்கும் அடிப்படையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காங்கயம் தாராபுரம் மெயின் ரோடு பகுதியான ேபாலீஸ் நிலையம், பஞ்சாயத்து யூனியன், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் வியாபாரம் நிறுவனங்கள் பகுதிகளை உள்ளடக்கிய களிமேடு எனும் பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ரோடு அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணிகள் இதுவரை முறையாக நடைபெறவில்லை. சில காரணங்களை காட்டி காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. இதனால் பாதசாரிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் உடனடியாக களிமேடு சாலையை விரிவுபடுத்த வேண்டும். இல்ைலயெனில் கோரிக்கை நிறைவேறும் வரை காங்கயம் போலீஸ் நிலையம் உள்பட 2 முக்கிய இடங்களின் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அமைச்சர், மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார், ஒன்றிய தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு களிமேடு பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுகுறித்து போட்டோவுடன் மாலைமலரில் செய்தியும் வெளியானது. இதைத்தொடர்ந்து தற்போது களிமேடு பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின்கீழ் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News