உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்காக ஆயத்த பணிகள் வேகம்

Published On 2022-09-25 10:28 IST   |   Update On 2022-09-25 10:28:00 IST
  • ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
  • அரசமரம், சரக்கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

உடுமலை:

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஊராட்சிகளின் கட்டமைப்பு வசதி மட்டுமின்றி பசுமை நிறைந்த மாசில்லாத சுற்றுச்சூழலை உருவாக்கவும் மரம் வளர்க்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

உடுமலை ஒன்றியத்துக்கான மரக்கன்றுகள் போடிபட்டியில் பண்ணை அமைத்து தயார் செய்யப்படுகிறது. மரக்கன்றுகள் எண்ணிக்கைக்கு தேவையான அளவு விதைகள், கன்றுகள் பராமரிப்பதற்கான மண், உரம் உள்ளிட்டவை அனைத்தும் வேலை உறுதி திட்டத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.

திட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு அரசமரம், சரக்கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிக மரக்கன்றுகள் நடும் வகையில் இடவசதியுள்ள ஊராட்சிகளை தேர்வு செய்து மரக்கன்றுகள் வழங்கப்படும். வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இதற்கான மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன என்றனர்.

Tags:    

Similar News