உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மழை-குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கார்த்திகை பட்ட சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு

Published On 2022-11-14 04:17 GMT   |   Update On 2022-11-14 04:17 GMT
  • விவசாயிகள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட போதிலும் இந்த மழையால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
  • விவசாயிகள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட போதிலும் இந்த மழையால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

திருப்பூர்:

கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. வயல்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.விவசாயிகள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட போதிலும் இந்த மழையால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஒரு சில குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.மா, வாழை, தென்னை உள்ளிட்ட மரப் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை பேருதவியாக அமைந்துள்ளது.

கார்த்திகை பட்டம் துவங்க உள்ளதால் விவசாயிகள் மக்காச்சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த ஆண்டு சின்ன வெங்காயத்திற்கு போதுமான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.இந்த சீசனில் நல்ல விலை கிடைப்பதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

பயிர் சாகுபடிக்கு போதுமான மழை பெய்துள்ளதாலும், குளம், குட்டைகளுக்கு நீர் வரத்துவங்கி உள்ளதாலும் கார்த்திகை பட்ட சாகுபடி பரப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News