உள்ளூர் செய்திகள்
உணவு வணிகர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்ற காட்சி. 

பல்லடத்தில் உணவு வணிகர்களுக்கான பயிற்சி முகாம்

Published On 2023-05-28 08:19 GMT   |   Update On 2023-05-28 08:20 GMT
  • உணவு வணிகர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பல்லடம் தனியார் உணவகத்தில் நடைபெற்றது.
  • பயிற்சி முடிவில் அனைவருக்கும் மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

பல்லடம்:

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மத்திய அரசின் ஏஜென்சி ஆகியவை இணைந்து நடத்திய உணவு வணிகர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பல்லடம் தனியார் உணவகத்தில் நடைபெற்றது. பல்லடம் உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்,மெஸ் உரிமையாளர்கள்,பேக்கரி உரிமையாளர்கள்,உணவு பொருட்கள் விநியோகி ஸ்தர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட உணவு வணிகர்கள் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சியில் தன் சுத்தம் பேணுதல், பராமரிப்பு, உணவு கையாளும் முறைகள், பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் வகைகள், உணவுப் பொருளில் ஏற்படக்கூடிய கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடிவில் அனைவருக்கும் மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு உணவு வணிகரும் ஒவ்வொரு உணவு கையாளுபவர்களும் பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்ற நபரை பணிக்கு அமர்த்த வேண்டும். உணவு உற்பத்தி அல்லது வணிகம் மேற்கொள்ளும் அனைத்து உணவு வணிகர்களும் கட்டாயம் மத்திய அரசால் வழங்கப்படும் ஒருநாள் உணவு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News