உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உழவன் செயலியில் பட்டு வளர்ச்சி துறை தகவல்களை இணைக்க வேண்டுகோள்

Published On 2023-04-24 05:01 GMT   |   Update On 2023-04-24 05:01 GMT
  • பட்டு உற்பத்தியில் கணிசமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
  • சந்தை விலை நிலவரம், அணை நீர்மட்டம் உள்ளிட்ட, 23 வகையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

திருப்பூர்:

விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள், விலை நிலவரம், வானிலை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள உழவன் செயலி பயனுள்ளதாக அமைந்துள்ளது.

உழவன் செயலியில் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர்க் காப்பீடு, உரங்கள் இருப்பு நிலை, சந்தை விலை நிலவரம், அணை நீர்மட்டம் உள்ளிட்ட, 23 வகையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பல மாதங்களாக பட்டு வளர்ச்சி துறை சம்பந்தமான தகவல்களை காண முடிவதில்லை.பட்டு உற்பத்தியில் கணிசமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அது சம்பந்தமாக மானியத் திட்டங்கள், விலை நிலவரம் போன்ற தகவல்களை விவசாயிகள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.ஆனால் அந்த தகவல்களை உழவன் செயலில் காண முடியாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே உழவன் செயலியில் பட்டு வளர்ச்சி துறை தகவல்களை இணைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

Similar News