கோப்புபடம்
திருப்பூர் அருகே பேக்கரி மீது பெட்ரோல் குண்டுவீச்சு
- கடைக்கு வந்த 2பேர் பானி பூரி சாப்பிட்டு உள்ளனர்.
- பேக்கரிக்கு வந்து ‘மீதி சில்லறை வேண்டும்’ என்று தகராறு செய்துவிட்டு சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் கொடுவாயை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 33). இவர் பெருந்தொழுவில் பேக்கரி வைத்துள்ளார். நேற்று மாலை இவரது கடைக்கு வந்த 2பேர் பானி பூரி சாப்பிட்டு உள்ளனர். அதில் உப்பு குறைவாக இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்துவிட்டு, பணத்தை வீசிவிட்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் மீண்டும் பேக்கரிக்கு வந்து 'மீதி சில்லறை வேண்டும்' என்று தகராறு செய்துவிட்டு சென்றனர்.
பின் மீண்டும் கடைக்கு வந்த அவர்கள் பெட்ரோல் நிரப்பிவந்த மதுபாட்டிலை பேக்கரி மீது வீசியுள்ளனர். டீ குடிக்க வந்தவர்கள் அலறி அடித்து வெளியே வந்துள்ளனர். இதற்கிடையே இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். தீப்பற்றவைத்து பாட்டிலை வீசாததால் பெரும் சேதம் எதுவும் நடக்கவில்லை. அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்று விசாரிக்கின்றனர். அங்குள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.