உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் சூடுபிடிக்கும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனை

Published On 2022-12-03 07:01 GMT   |   Update On 2022-12-03 07:01 GMT
  • வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில்கள் அமைத்து கொண்டாடி வருவது வழக்கம்.
  • மின்னணு விளக்குகளால் அமைக்கப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் குடில்கள் ஆகியவை பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

திருப்பூர் :

ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி இயேசு பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ்பண்டிகை கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ்பண்டிகை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்கள் மற்றும் வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடில்கள் அமைத்து கொண்டாடி வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடமும் கிறிஸ்துமஸ்பண்டிகை கொண்டாடும் வகையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ மக்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திரங்கள் மற்றும் குடில்கள் அமைத்து கொண்டாடிவருகின்றனர். தேவாலயங்களில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து திருப்பூர், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் மற்றும் குடில்கள் விற்பனை தொடங்கியுள்ளது. பல வண்ணங்களுடன் கூடிய நட்சத்திரங்கள், மின்னணு விளக்குகளால் அமைக்கப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் குடில்கள் ஆகியவை பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News