உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

இந்து முன்னேற்ற கழகம் சார்பில் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் - பொதுக்கூட்டம் இன்று இரவு நடக்கிறது

Published On 2023-09-19 08:15 GMT   |   Update On 2023-09-19 08:15 GMT
  • இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 20 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.
  • அந்தந்த பகுதியில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்தும் அன்னதானத்தையம் அவர் தொடங்கி வைத்தார்.

திருப்பூர்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 20 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் வக்கீல் கோபிநாத், கருமாரம்பாளையம், காலேஜ் ரோடு, மங்கலம் ரோடு, சுகுமார் நகர் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். பின்னர் அந்தந்த பகுதியில் அன்னதானத்தை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த், மாநில இளைஞரணி செயலாளர் ராதாசுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு திருப்பூர் கொங்கணகிரி கோவில் முன் இருந்து விசர்ஜன ஊர்வலம் தொடங்குகிறது. பின்னர் இரவு ஆலங்காட்டில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் வக்கீல் கோபிநாத் சிறப்புரையாற்றுகிறார்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து வாகனங்களில் விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News