உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அவிநாசியில் விநாயகர் சதுர்த்தி விழா

Published On 2022-09-04 08:18 GMT   |   Update On 2022-09-04 08:18 GMT
  • இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி திருவிழா செங்காடு திடலில் நடந்தது.
  • இமயம் முதல் குமரி வரை ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளன.

அவிநாசி :

அவிநாசியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி திருவிழா செங்காடு திடலில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கேசவன் முன்னிலை வகித்தார்.

இதில் மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பேசியதாவது:- ஆர்.எஸ்.எஸ்.,இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க., ஆகியவை இமயம் முதல் குமரி வரை ஒரே தேசமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலமும் புனிதமானது.அனைத்து மக்களும் ரத்த சகோதரர்கள் என்ற உணர்வை வலியுறுத்துகின்றன. பிரதமர் மோடி தேசத்தின் ஒற்றுமைக்காக, வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் பேசுகையில், விநாயகர் சதுர்த்திக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிக்காததால் தி.மு.க.,வில் இருக்கும் இந்து தொண்டர்கள் வெட்கப்பட்டு தலைகுனிந்துள்ளனர். 'பிரிவினையை முறிடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற கருத்து இந்தாண்டை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம் என்றார்.

Tags:    

Similar News