உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள். 

திருப்பூரில் சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்

Published On 2022-12-13 13:34 IST   |   Update On 2022-12-13 13:34:00 IST
  • புத்தியை கெடுக்கும் போதை பொருட்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும்.
  • போதைப் பழக்கம் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

 திருப்பூர்  : 

 தமிழகத்தில் மது மற்றும் போதை பொருட்களை முற்றிலும் அகற்றிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் உத்தரவின் பேரில் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 இதேபோல் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.கிழக்கு மாவட்ட செயலாளர் அக்குவா டெக்ஸ் ரமேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது மதுவால் மனரீதியான சமூக ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், புத்தியை கெடுக்கும் போதை பொருட்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும், தமிழகத்தில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதால் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மாரியப்பன், மணி, சந்தோஷ், சேனு, ரமேஷ், விக்கி, சுந்தர்ராஜ், ராஜதுரை உள்ளிட்டதிரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News