உள்ளூர் செய்திகள்
பூச்சிக்கொல்லி மருந்தால் பயிர்கள் சேதமான விவசாயிகளுக்கு இழப்பீடு
- தனியார் மருந்து நிறுவனத்தின் சார்பில் 8 விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் காசோலைகள் வழங்கப்பட்டது.
- பாதிப்படைந்த 8 விவசாயிகளுக்கு தனியார் மருந்து நிறுவனம் இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளை வழங்கியது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம்,கரைப்புதூர், உகாயனூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சோளப்பயிர்களுக்கு களைக்கொல்லி பூச்சி மருந்து அடித்து பயிர்கள் கருகியதை தொடர்ந்து தனியார் மருந்து நிறுவனத்தின் சார்பில் 8 விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் காசோலைகள் வழங்கப்பட்டது.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி பொதுச்செயலாளர் பொன்னுலிங்கம் முயற்சியால் ,பாதிப்படைந்த 8 விவசாயிகளுக்கு தனியார் மருந்து நிறுவனம் இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளை வழங்கியது. இதனை விவசாயிகளுக்கு பா.ஜ.க. மாவட்ட பொதுசெயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரன், மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட செயலாளர் நித்யா ஆனந்தகுமார், மண்டல் தலைவர் கிருஷ்ணபிரசாத், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.