உள்ளூர் செய்திகள்

கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் வினீத் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பல்லடம் ஊராட்சி தலைவர் தேன்மொழி மற்றும் பலர் உள்ளனர்.

மக்கள் தொடர்பு முகாமில் 194 பேருக்கு ரூ.41.79 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வினீத் வழங்கினார்

Published On 2022-11-10 07:36 GMT   |   Update On 2022-11-10 07:36 GMT
  • சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது.
  • 10 அல்லது 12-க்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து வங்கிகளுக்கு விண்ணப்பம் அளித்தால், கடன் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரடிவாவி ரங்கசாமிகவுண்டர் மண்டபத்தில், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் சார்பில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 194 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 79 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார். விழாவில் கலெக்டர் வினீத் பேசியதாவது:-

சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. 10 அல்லது 12-க்கு மேற்பட்டவர்கள் குழுவாக சேர்ந்து வங்கிகளுக்கு விண்ணப்பம் அளித்தால், கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சுயஉதவிக்குழுக்கள் குறைவாக உள்ளதால், மேலும், சுய உதவிக்குழுக்கள் அதிகளவில் சேர்ந்து பயன்பெற வேண்டும். அந்த வகையில் கரடிவாவியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 62 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 11 பேருக்கு ரூ.1.32 லட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, 5 பேருக்கு ரூ.21 ஆயிரத்து 250 மதிப்பில் கணினி புதிய குடும்ப மின்னணு அட்டை, 20 பேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 207 மதிப்பீட்டில் இடுபொருட்கள், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 15 பேருக்கு ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 452 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் சார்பில், 3 பேருக்கு ரூ.75 ஆயரம் மதிப்பிலும், இலங்கை தமிழர் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 12 பேருக்கு ரூ.90 ஆயிரத்து 570 மதிப்பில் என மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 79 ஆயிரத்து 479 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News