உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை நகராட்சி சார்பில் தூய்மை விழிப்புணர்வு பேரணி

Published On 2022-07-14 05:00 GMT   |   Update On 2022-07-14 05:00 GMT
  • என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
  • நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுவது பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

உடுமலை :

உடுமலை நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

பேரணிக்கு உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தின் தலைமை வகித்தார். ஆணையர் சத்தியநாதன் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பாரதியார் நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணி மாணிக்கம் வீதி வித்யாசாகர் கல்லூரி ராஜேந்திரா சாலை வழியாக நுண்ணுயிர் உரக்கிடங்கை அடைந்தது. அங்கு நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்படுவது பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் நகர் அலுவலர் கௌரி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், ஆறுமுகம், ராஜ்மோகன், விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News