உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட தங்கராஜ், தினேஷ்.

உடுமலை அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

Published On 2022-08-05 07:10 GMT   |   Update On 2022-08-05 07:10 GMT
  • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்.
  • 12 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

உடுமலை :

உடுமலையையடுத்த வெஞ்சமடை முத்துச்சாமி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மகன் சிவசாமி(வயது 55).இவர் உடுமலை பஸ் நிலையம் எதிரே துணிக்கடை வைத்துள்ளார்.இந்தநிலையில் கடந்த மாதம் 12 ம் தேதி இவருடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 12 பவுன் நகையை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து சிவசாமி உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் உடுமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா,சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார்,தலைமைக் காவலர் பஞ்சலிங்கம் மற்றும் போலீசார் முத்துமாணிக்கம், மணிகண்டன் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.200 க்கும் மேற்பட்ட சிசிடிவி. பதிவுகளை ஆய்வு செய்தனர்.இதில் குற்றவாளிகள் சொகுசு காரில் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.அத்துடன் குற்றவாளிகள் குறித்த பல்வேறு தகவல்கள் கிடைத்தது.இதனையடுத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று உடுமலை தாராபுரம் சாலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.அவர்களிடமிருந்து 4 1/2 பவுன் நகையை கைப்பற்றினர்.அவர்கள் சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் தங்கராஜ்(வயது 38),திருப்புவனத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் தினேஷ்(என்ற)தினேஷ்குமார் என்பது தெரியவந்தது.மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தது.

குற்றவாளி தங்கராஜின் அண்ணனைக் கொன்றவர்களைப் பழி வாங்கும் விதமாக கடந்த 2 வாரங்களுக்கு முன் சிவகங்கையில் வைத்து ஒருவரைக் கொலை செய்து விட்டு தப்பி வந்துள்ளனர்.அதுமட்டுமல்லாமல் கோவை,திண்டுக்கல்,தூத்துக்குடி,மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலை,கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் இவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

Similar News