உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவில் அருகே நூல் மில்லில் திருடிய 2 பேர் கைது

Published On 2023-09-01 16:36 IST   |   Update On 2023-09-01 16:36:00 IST
  • அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது,
  • கைது செய்தவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் செந்தில்குமார் (வயது 42). இவர் திருச்சி -கோவை ரோட்டில் வெள்ளமடை என்ற இடத்தில் வாடகை கட்டிடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நூல் மில் நடத்தி வருகின்றார். சில மாதங்களுக்கு முன்பு மில்லில் தீ விபத்து ஏற்பட்டு தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

சம்பவத்தன்று செந்தில்குமார் மில்லின் அறையை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்தபோது மில் அறையின் பூட்டை உடைத்து அறையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது,

இது குறித்து செந்தில்குமார் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது முத்தூர் அருகே சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து விசாரித்ததில் நூல் மில்லில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வெள்ளகோவில், எம்.ஜி.ஆர் நகர்., பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கருப்புசாமி , நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கவுதம் என்பது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.அதன் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News