உள்ளூர் செய்திகள்
- நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50) கூலி தொழிலாளி நேற்று மாலை சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். சோலூர் பகுதியை சேர்ந்த தேவன் என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் மீது மோதியது. இதில் ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.