உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்து பயிற்சி

Published On 2023-02-23 15:33 IST   |   Update On 2023-02-23 15:33:00 IST
  • மானிய விலையில் சோலார் மின் மோட்டார் வழங்கப்படுகிறது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா வெங்களாபுரம் கிராமத்தில் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விவசாயிகளுக்கான உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக பயிற்சி அளித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் பாலா தலைைம தாங்கினார். விவசாயிகளுக்கு உழவன் ஆப் பற்றி பயிற்சி அளித்து அவர் பேசியதாவது:-

வேளாண் துறை திட்டங்கள், ஒருங்கிணைந்த வேளாண் பண்ணை, மாடி தோட்டங்கள், பற்றியும் இயற்கை விவசாயம், விவசாயிகளுக்கு பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டர்கள், வேளான் எந்திரங்கள், வழங்குவது குறித்தும் மானிய விலையில் சோலார் மின் மோட்டார் வழங்கப்படுகிறது.

குறித்தும் உழவன் ஆப் மூலம் பதிவு செய்து பயனடையலாம் இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பேசினார்.

நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் ராகினி, உட்பட வேளாண் துறை, ஆத்மா திட்ட, அலுவலர்கள் கலந்து கொண்டு பேசினார்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரீடம்பவுண்டேஷன் நிறுவன தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.

இறுதியில் பிரீடம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை அதிகாரி. எழிலரசி நன்றி கூறினார். இந்த பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News