உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க இடம் ஆய்வு

Published On 2022-09-08 08:58 GMT   |   Update On 2022-09-08 08:58 GMT
  • மாவட்ட கவுன்சிலர் தனது நிலத்தை வழங்க ஒப்புதல்
  • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி கிராமத்தில் தற்போது கிராம நிர்வாக அலுவலகம் இல்லாத நிலை இருந்து வருகிறது.

இங்கு திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் மேற்படி கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க இடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 3 சென்ட் சொந்த இடத்தை இலவசமாக வழங்க மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன் முன்வந்து தாசில்தார் சிவப்பிரகாசத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

அதன் பேரில் நேற்று தாசில்தார் சிவப்பிரகாசம் கட்டேரி கிராமத்திற்கு சென்று கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வழங்க உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன் வழங்க உள்ள இடத்தை காண்பித்து ஒப்புதல் அளித்தார்.

இந்த ஆய்வின் போது கட்டேரி ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், ஜோலா ர்பேட்டை உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ரவிமா ராஜன், கிராம நிர்வாக அலுவலர் ராஜா, உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News