உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றிய காட்சி.

வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

Published On 2022-10-20 09:34 GMT   |   Update On 2022-10-20 09:34 GMT
  • ஏரி கால்வாய்களில் கட்டியிருந்ததால் நடவடிக்கை
  • அதிகாரிகள் ஆய்வு

வாணியம்பாடி:

வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரி அருகே ஏரி கால்வாய் செல்கிறது. இதனை ஆக்கிரமித்து 48 வீடுகள் கட்டப்பட்டதால், அங்கு வெளியேறும் தண்ணீர் மருத்துவமனை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

இதனை அகற்றக் கூறி பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணி முதல் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணியில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அகற்றப்பட்டு வரும் வீடுகளில் ஒரு சிலர் தாங்களே அகற்றி கொள்வதாக கூறியதால், அந்த கட்டிடங்களை மட்டும் இடிக்காமல் மற்றவையை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்‌.

போலீஸ் பாதுகாப்பு

சம்பவ இடத்தில் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாணியம்பாடி தாசில்தார் சம்பத், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News