உள்ளூர் செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

Published On 2022-09-13 09:50 GMT   |   Update On 2022-09-13 09:50 GMT
  • பணத்தை பாதுகாப்பாக எடுத்து செல்வது குறித்து விளக்கம்
  • சட்டவிரோத செயல்களை தடுக்க ரோந்து பணி

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் வழிப்பறி, செயின் பறிப்பு, பணம் கொள்ளை போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சந்தைக்கோடியூர் பகுதியில் வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்தை மொபட்டில் வைத்துவிட்டு துணி கடைக்கு சென்ற ஒருவம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பைக்கில் வந்த மர்ம நபர்கள் கண்காணித்து நூதனமாக கொள்ளையடித்துச் சென்றனர்.

வங்கிக்கு வரும் பொது மக்களை மர்ம நபர்கள் கண்காணித்து அவர்கள் எடுத்துச் செல்லும் பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்து செல்வதால் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் சார்பில் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள தேசிய உடமை யாக்கப்பட்ட வங்கியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் வங்கி வாடிக்கையாளர் களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் வங்கி ஊழியர்கள் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News