திருப்பத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்த காட்சி.
திருப்பத்தூர், ஆம்பூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- சிலைகளுக்கு சிறப்பு பூஜை
- ஏரியில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 15-ந் தேதி இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் 686 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று திலகர் இந்து இளைஞர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு விழா குழு தலைவர் பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் வி .அன்பழகன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஆர்.சண்முகம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன்கொடி அசைத்து அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதில் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் எம். தீபா, பொதுச் செயலாளர் கவியரசு, அருள்மொழி,, பா.ஜ.க. நகர துணைத் தலைவர் ஆர். ரவி, வர்த்தக அணி நகர தலைவர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் ஏரியில் பலத்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.
அதேபோல் ஆம்பூர் கிருஷ்ணாபுரம், கஸ்பா, பைபாஸ் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய சாலைகள் வீதியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் அறை மடுகு பகுதிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஏரியில் கரைக்கப்பட்டது.