- செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த கணவாய் புதூர் பகுதியில் உள்ள இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கமும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது.
முகாமிற்கு கல்லூரி செயலாளர் எம். கோபால் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் புவனேஸ்வரி கண்ணன், செயலாளர் மலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ஸ்ரீனிவாசன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்எல்ஏ கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் கல்லூரி மாணவர்கள், கல்லூரி முதல்வர், ரோட்டரி சங்கத்தினர் உட்பட 50 பேர் ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை கோ.செந்தில்குமார் எம்எல்ஏ வழங்கினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் எஸ். சரவணன், முன்னாள் தாசில்தார் பிதாம்பரம், உதயகுமார், செல்வம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, குமார், நகர மன்ற உறுப்பினர் ஹாஜியார் ஜகீர்அஹமத், நவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.