உள்ளூர் செய்திகள்

ரெயிலில் ரேசன் அரிசி கடத்திய 2 பெண்கள் கைது

Published On 2023-03-28 14:36 IST   |   Update On 2023-03-28 14:36:00 IST
  • 200 கிலோ பறிமுதல்
  • கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. ரெயிலில் முன்பகுதியில் உள்ள பொது பெட்டியில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

10 மூட்டைகளில் 200 கிலோ ரேஷன் அரிசியை 2 பெண்கள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News