திருக்கயிலாய காட்சி திருவிழாவை சூரியனார் கோயில் ஆதீனம் தொடக்கம்.
- சூரியனார் கோயில் ஆதீனம் வாமதேவ சந்தானம் 28 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடக்கி வைத்தார்.
- கரந்தை பூக்களம் அமுத மொழியால் சீதா நந்தீஸ்வரர் கோயில் ரிஷப வாகனம் வீதி உலாவில் இடம் பெற்றன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் திருக்கயிலாய காட்சி திருவிழா மற்றும் ஆடி தீர்த்தவாரி விழாவினை திருக்கைலாய ஸ்ரீகந்தப் பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் வாமதேவ சந்தானம் 28 -வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடக்கி வைத்தார்.
ரிஷப வாகன புறப்பாட்டில் தஞ்சாவூர் கரந்தை, பழைய திருவையாறு ரோடு வேதவல்லி அம்மை உடன்மர் நாக நாகேஸ்வரர் கோவில், அன்னகாமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோவில், கரந்தை செல்லியம்மன் கோயில், வடக்கு வாசல் வடபத்ரகாளி, கரந்தை பூக்களம் அமுத மொழியால் சீதா நந்தீஸ்வரர் கோயில் ரிஷப வாகனம் வீதி உலாவில் இடம் பெற்றன.
இந்நிகழ்ச்சியில் சிதநந்தீஸ்வரர் சுவாமிகள் திருக்கோயில் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், துணைத் தலைவர் டாக்டர் பழனி குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் கண்ணன் ,அன்ன காமாட்சி அம்மன் நிர்வாக டிரஸ்ட் நாக நாரேஸ்வரர் வழிபாட்டு குழுவினர் தர்மரக்ஷண சமாதி உள்ளிகள், சமூக நல அமைப்பு, தஞ்சை பெருவுடையார் சிவகங்கை கூட்டம் ஆகிய அமைப்பினர் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ண்டனர்.