உள்ளூர் செய்திகள்

உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை:கலெக்டர் அறிவுரை

Published On 2023-03-03 14:49 IST   |   Update On 2023-03-03 14:49:00 IST
  • நோயாளிகளிடம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைப் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
  • சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

பாப்பிரெட்டிபட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் வெளிநோயாளிகள் பிரிவு, கண் அறுவை அரங்கம், பிரசவ வார்டு, NCD பிரிவு ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

பெண் உள்நோயாளிகள் பிரிவில் ஆய்வு செய்து, நோயாளிகளிடம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைப் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். மேலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் சேவை மனப்பான்மையோடு சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

அவசர சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை மேம்படுத்த அரசுக்கு பரிந்துரை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோழிமேக்கனூர் குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி குழந்தை மையத்தில் பயன்பெறும் 5 குழந்தைகளுக்கு சப்பி சாப்பிடும் வகையில் RUTF Sachet மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி, தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வுகளின்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Tags:    

Similar News