வணிகவரி மற்றும் பதிவுத்துைற சார்பாக நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை அமைச்சர்கள் காந்தி, மூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை மூலம் ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய்- அமைச்சர் மூர்த்தி தகவல்
- போலியான நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்வதை தடுத்திடவும் பல்வேறு தொடர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
- பதிவுத்துறை மூலம் ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் ஈட்டப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக, அமைச்சர்கள் மூர்த்தி, காந்தி ஆகியோர் தலைமையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக சேலம் வணிகவரி கோட்டம் மற்றும் சேலம் பதிவுத்துறை மண்டல அளவிலான அலுவலர்களுடன் கலந்துரையாடல் மற்றும் சீராய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், முதன்மை செயலரும், வணிக வரி ஆணையருமான தீரஜ்குமார், அரசு செயலர் (வணிகவரி மற்றும் பதிவுத்துறை) ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, டாக்டர்.செல்லக்குமார் எம்.பி.,
எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பென்னாகரம் ஜி.கே.மணி, மேட்டூர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பதிவுத்துறை தலைவர் சிவனருள் வரவேற்புரையாற்றினார்.
இதில், அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-
க தமிழக முதல்வர், வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து, பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டவும், வரி செலுத்தாதவர்களை கண்டறிந்து வரி வசூல் செய்யவும், போலியான நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்வதை தடுத்திடவும் பல்வேறு தொடர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அதன் அடிப்படையில், இன்று சேலம் கோட்டத்திற்குட்பட்ட கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வணிகவரித்துறை, பதி வுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக முதல்அ-மைச்ச ரின் வழிகாட்டுதலின்படி, அனைத்து அலுவலர்களும் நல்ல முறையில் பணியாற்று வதன் விளைவாக வணிகவரித்துறை சார்பாக கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960 கோடி என்ற இருந்த வருவாய் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. பதிவுத்துறை சார்பாக ரூ.13 ஆயிரம் கோடி வருவாய் இருந்ததை ரூ.20 ஆயிரம் கோடி இலக்கு எய்தப்பட்டது. அதன்படி, வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை மூலம் ஆண்டிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் ஈட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பயன்படுத்தப்பட்ட தொன்மை வாய்ந்த அலுவலக பதிவேடு மற்றும் முத்திரைகள், அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்த கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்ததை அமைச்சர்கள் பார்வை யிட்டனர்.
தொடர்ந்து சேலம் மண்டல வணிகவரி துறை, கூடுதல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் துறை அலுவலர்களுக்கான சீராய்வுக் கூட்டம் மற்றும் சேலம் பதிவு மண்டல அளவிலான துணைப் பதிவாளர்கள், சார் பதிவார்க ளுக்கான சீராய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் பரமேஸ்வரன், இணை ஆணையர் ஜெயராமன், துணை ஆணையர் ஹேமா, கூடுதல் பதிவுத்துறை தலைலர்கள் சீனிவாசன், முகமதுஜபார் சாதிக், அங்கயற்கண்ணி, சேலம் மண்டல பதிவுத்துறை துணை தலைவர் பிரபாகர், கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர் கவிதா மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்ட துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், துணை பதிவாளர்கள், சார் பதிவாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், தடங்கம் சுப்பிரமணி, முருகன், பி.டி.ஏ தலைவர்கள் நவாப், பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.