உள்ளூர் செய்திகள்

மழையால் மூழ்கிய நெற்பயிரை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயி மற்றும் வெளியேற முடியாமல் நிறுத்தப்பட்டிருக்கும் நெல் அறுவடை எந்திரம்.

ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்பு

Published On 2022-09-26 09:28 GMT   |   Update On 2022-09-26 09:28 GMT
  • அறுவடை பணி நடந்து வந்ததால் அறுவடை எந்திரம் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
  • மழையால் போட்ட முதலீட்டை கூட மீட்க முடியுமா என்பது கூட தெரியவில்லை.

தஞ்சாவூர்:

காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே மாதத்திலேயே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் மும்முரமாக செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 72 ஆயிரத்து 816 எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

தற்போது பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இன்னும் 2 வாரத்திற்குள் அறுவடை பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நள்ளிரவில் கனமழை கொட்டியது.

தொடர்ந்து 3 மணி நேரத்தி ற்கும் மேலாக இடைவிடாது கனமழை பெய்தது.

இதன் காரணமாக தஞ்சை மாவட்டம்புதுகல்வி ராயன்பேட்டை,மானோ ஜிபட்டி, சித்திரைக்குடி, பூதலூர், கல்விராய ன்பே ட்டை மற்றும் சுற்றுவ ட்டார பகுதிகளில் மட்டும் 500 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயி ர்கள் வயலில் மழைநீர் புகுந்தது.

தொடர்ந்து தண்ணீர் சென்றதால் வயல்கள் வெள்ளக்காடாக மாறியது.

அறுவடைக்கு தயாரன பயிர்கள் மூழ்கி சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் புதுகல்விராயன்பேட்டை பகுதியில் 2 நாட்களாக அறுவடை பணி நடந்து வந்ததால் அறுவடை எந்திரம் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தற்போது பெய்த மழையால் அறுவடை எந்திரம் வெளியே வர முடியாமல் வயலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ததால் 1000 ஏக்கர் அளவுக்கு அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மூழ்கி சாய்ந்து பாதிக்கப்பட்டு இருக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது:-

தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் எதிர்பாராத கனமழையால் பல இடங்களில் அறுவ டைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

லேசான மழை பெய்தால் இந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது.

ஆனால் 4 நாட்களுக்கு சேர்த்து மிகப்பெரிய அளவில் கனமழையாக பெய்ததால் வயலில் தண்ணீர் சூழந்து பயிர்கள் மூழ்கி விட்டன.

இதனால் மகசூல் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

மேலும் ஒரு வயலில் 1 மணி நேரம் எந்திரம் மூலம் அறுவடை நடந்தால் இனி அது 3 மணி நேரமாக அதிகரிக்கும்.

இதனால் கூடுதல் செலவு ஏற்படும். நாங்கள் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவழித்து பயிரிட்டிருந்தோம்.

தற்போது மழையால் போட்ட முதலீட்டை கூட மீட்ட முடியுமா என்பது கூட தெரியவில்லை.

எனவே உடனடியாக குறுவை பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் மூழ்கி பாதிப்படைந்த பயிர்களை கணக்கீட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News