உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற பெண்கள் அணியினருக்கு பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

கபடி போட்டி ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணி முதலிடம்

Published On 2022-07-19 10:03 GMT   |   Update On 2022-07-19 10:03 GMT
  • பெண்கள் பிரிவில் 12 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் பங்குபெற்றனர்.
  • போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் ஊடையகாடு கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் திடலில் ராகவன் நினைவாக மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் பெண்கள் பிரிவில் 12 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் பங்குபெற்றனர். போட்டியை நிமல் ராகவன் ஒருங்கிணைத்து நடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆண்கள் கபடி போட்டியில் முதல் பரிசை திருவாரூர் மாவட்டம் வடுவூர் அணியினரும், 2-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் முல்லை வெண்புறா அணியும், 3-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடி அணியும், 4-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் அணியினரும் வென்று பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் பெற்றனர்.

இதேபோல, பெண்கள் கபடி போட்டியில் முதல் பரிசை மதுரை மாவட்டம் சித்தம்பட்டி அணியினரும், 2-ம் பரிசை கட்டகுடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும், 3-ம் பரிசை தஞ்சை மாவட்டம் தென்னமநாடு தென்னவன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும், 4-ம் பரிசை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் செல்வம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும் வென்று பரிசு மற்றும் சுழற்கோப்பை பெற்றனர். நிறைவாக முன்னாள் மாநில கபடி வீரர் வெண்புறா சடகோபன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News