சாலை ஓரம் வீசப்பட்ட நகைப்பெட்டிகளை சேகரித்த காட்சி.
சாலையோரம் கிடந்த காலி நகை பெட்டிகளால் பரபரப்பு
- திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் கைவரிசையா?
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமம் புறவழி சாலை ஓரத்தில் 30-க்கும் மேற்பட்ட நகை பெட்டிகள் கிடந்தது.
அந்த வழியாக சென்ற பொது மக்கள் இது குறித்து வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே சென்று விசாரணை நடத்தினார். மேலும் நகை பெட்டிகளை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தினர். இதில் அவை அனைத்தும் காலி நகை பெட்டிகள் என்பது தெரிய வந்தது.
திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர், கொள்ளையடித்த நகை களை எடுத்துக்கொண்டு, காலி நகை பெட்டிகளை சாலை ஓரத்தில் வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதோ ஒரு காரணங்களுக்காக காலிப் பெட்டிகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தி னார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.