உள்ளூர் செய்திகள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-04-17 15:32 IST   |   Update On 2023-04-17 15:32:00 IST
  • திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா வரும் 25-ந்தேதி தொடங்குகிறது.
  • வருகிற 27-ந்தேதி 63 நாயன்மார்கள் கிரிவலம் நடைபெறுகிறது.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழா வரும் 25-ந்தேதி தொடங்கி, மே மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

முதல்நாள் இரவு பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி வழிபாடு நடைபெறுகிறது.

வருகிற 27-ந்தேதி 63 நாயன்மார்கள் கிரிவலம், மே 1-ந்தேதி பஞ்சமூர்த்தி சுவாமி திருத்தேரில் வீதி உலா நடைபெறுகிறது.

Tags:    

Similar News