உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பெரியகுளம் அருகே கோவில் உள்பட 4 இடங்களில் திருட்டு

Published On 2023-05-08 05:13 GMT   |   Update On 2023-05-08 05:13 GMT
  • அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த பணம், செல்போன், மற்றும் ஒரு கன்று, தோப்பில் இருந்த பைப் உள்ளிட்ட விவசாய பொருட்கள் திருடு போனது.
  • போலீசர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது62). இவரது சமுதாயத்திற்கு ட்பட்ட வடகத்தி மாரியமன் கோவில் பொம்மி நாயக்கன்பட்டி ரோட்டில் உள்ள ஒண்டிவீரன்சாமி மற்றும் வீரகத்தி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று அவரது மகன் முத்து ப்பாண்டி மின் விளக்கை போட்டு விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தார்.

அப்போது அம்மன் சிலையில் இருந்த 4 கிராம் மதிப்பிலான மாங்கல்யம், விளக்கு, சூலம், உண்டியல் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

ஏ.வாடிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமபிரசாத் (25). இவர் சம்பவத்தன்று தனது ஆட்டு கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (32) என்பவர் அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த பணம், செல்போன் ஆகிய வற்றை திருடிக்கொண்டு சென்றார். இது குறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாண்டியராஜனை கைது செய்தனர்.

பெரியகுளம் அருகில் உள்ள சருத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (36). இவர் தனக்கு சொந்தமான கொட்டகையில் கிடாரி கன்றுகளை கட்டி வைத்திருந்தார். அதில் ஒரு கன்று திருடு போனது. இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் அருகில் உள்ள காந்திநகர் பாம்பார் மஸ்தான் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் வடகரை கும்பக்கரை பிரிவு அருகில் தென்ன ந்ேதாப்பை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று தோப்பில் இருந்த பைப் உள்ளிட்ட விவசாய பொருட்களை அனுமார் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (27) என்பவர் திருடிச் சென்றார். அவரை கையும் களவுமாக பிடித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.

போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News