உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு

Published On 2023-03-22 15:39 IST   |   Update On 2023-03-22 15:39:00 IST
  • தீவட்டிப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பாலம் அருகே வந்தபோது வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்தார்.
  • பஸ் நின்றவுடன் அதில் குடிபோதையில் வாலிபர் ஏறினார்.

சேலம்:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து ஓமலூருக்கு கடந்த 19-ந்தேதி மாலை அரசு பஸ் புறப்பட்டது. தீவட்டிப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பாலம் அருகே வந்தபோது வாலிபர் ஒருவர் பஸ்சை வழிமறித்தார். பஸ் நின்றவுடன் அதில் குடிபோதையில் வாலிபர் ஏறினார்.

அவர் பஸ்சில் இருந்த பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டார். இதனால் கண்டக்டர் செம்மலை (வயது 54) அந்த போதை வாலிபரை வழியில் இறக்கி விட்டார். அப்போது அவர், கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

இது பற்றி தீவட்டிப்பட்டி போலீசில் கண்டக்டர் செம்மலை புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் பஸ்சில் குடிபோதையில் ஏறி தகராறில் ஈடுபட்டு கண்டக்டரை தாக்கியது, பூசாரிப்பட்டி அருகே உள்ள கோணம்பட்டியை சேர்ந்த செங்கோடன் மகன் ராஜ குபேந்திரன் (35) என ெதரியவந்தது.

அவரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் ராஜ குபேந்திரன் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ராஜ குபேந்திரனை ெஜயிலில் அடைத்தனர். அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய நபரை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் பாராட்டினார்.

Tags:    

Similar News