உள்ளூர் செய்திகள்

மொபட்டில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.

மொபட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது

Published On 2022-11-18 13:16 IST   |   Update On 2022-11-18 13:16:00 IST
  • நல்ல பாம்பு குட்டி ஒன்று ஆசிரியையின் மொபட்டில் புகுந்ததை கண்டு அதிர்ச்சி.
  • நல்ல பாம்பு குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்து காட்டு பகுதியில் விட்டனர்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் ஆசரியர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம்.

இந்நிலையில், வழக்கம்போல் ஆசிரியை ஒருவர் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த சிலர் நல்ல பாம்பு குட்டி ஒன்று ஆசிரியையின் மொபட்டில் புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டனர்.

உடனே, அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திரை சீலன், அருள் ஜோதி, பாலாஜி அமுதன் ஆகியோர் நீண்ட நேரம் போராடி மொபட்டில் இருந்த நல்ல பாம்பு குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்து காட்டு பகுதியில் விட்டனர். இதனால், பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் கூறும்போது:-

பள்ளியின் அருகில் கருவை காடுகள் மண்டியிருப்பதால் அங்கிருந்து அடிக்கடி பாம்புகள், விஷபூச்சிகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகள் வருகிறது. எனவே, கருவை மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News