உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் நடந்த நகை கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறல்

Published On 2023-08-05 12:37 IST   |   Update On 2023-08-05 12:37:00 IST
  • கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததாலும் கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை.
  • கள்ளக்குறிச்சியில் தற்போது ஒரு திருட்டு வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாலூர், திருவதிகை, ராசாபாளை யம், எல்.என்.புரம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட் டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஆனால் போலீசாரால் இதுவரை கொள்ளையர்களை கைது செய்ய முடியவில்லை. கொள்ளை நடந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படா ததாலும் என்.எல்.சி. போராட்டம், பஸ்கள் கண்ணாடி உடைப்பு மேலும் போதிய அளவு போலீசார் இல்லாதது போன்ற காரணங்களாலும் இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் தற்போது ஒரு திருட்டு வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர்களில் ஒருவனுக்கு பண்ருட்டி கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளது என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பண்ருட்டி டி.எஸ்.பியின் தனிப்படை யினர் கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்ட ஒரு வனை சந்தேகத்தின் அடிப்படையில் காவலில் எடுத்து விசாரிக்க நட வடிக்கை எடுத்து வருகின்ற னர். இதில் துப்பு துலங்கி னால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீ சார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News