உள்ளூர் செய்திகள்
- சம்பவத்தன்று வீட்டிற்கு நடந்து செல்லும் பொழுது தடுமாறி கீழே விழுந்தார்.
- சிகிச்சை பலனின்றி இன்று காலை மாதம்மாள் உயிரிழந்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன். இவரது மனைவி மாதம்மாள் (வயது60). இவர் சிக்கமாரண்ட அள்ளி ெரயில்வே கேட் அருகே தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டிற்கு நடந்து செல்லும் பொழுது தடுமாறி கீழே விழுந்ததில் காயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று காலை மாதம்மாள் உயிரிழந்தார்.
இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.