உள்ளூர் செய்திகள்

சட்டையம்புதூர் பகுதியில் தைப்பொங்கல் விழா விளையாட்டு போட்டியில் இட்லி சாப்பிடும் போட்டி நடைபெற்ற காட்சி.

திருச்செங்கோடு பகுதிகளில் தைப்பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள்

Published On 2023-01-18 09:30 GMT   |   Update On 2023-01-18 09:30 GMT
  • தைப்பொங்கலை முன்னிட்டு பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
  • குறிப்பாக நந்தவனத் தெரு பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு கோழிகள் பிடிக்கும் விளையாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதிகளில் தைப்பொங்கலை முன்னிட்டு பல வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருச்செங்கோடு நகர பகுதிகளான நந்தவனத் தெரு, பாவடி தெரு, நெசவாளர் காலனி சட்டையம்புதூர், சூரியம்பாளையம் கூட்டப்பள்ளி, நாமக்கல் ரோடு எட்டிமடைப்புதூர் அம்பேத்கர் நகர், பக்தவச்சலம் நகர், கீழேரிப்பட்டி, கொல்லப்பட்டி என பல்வேறு பகுதிகளில் சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்களுக்கான பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

குறிப்பாக நந்தவனத் தெரு பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு கோழிகள் பிடிக்கும் விளையாட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். நெசவாளர் காலனி பகுதியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள் தங்களது உடல் வலிமையை வெளிப்படுத்தினர். சூரியம்பாளையம் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் கபடி போட்டிகள் ஆண்களுக்கு நடத்தப்பட்டது.

சட்டையம்புதூர் பகுதியில் இட்லி சாப்பிடும் போட்டி, வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் வெகுவாக பார்வையாளர்களை ரசிக்க வைத்தது . பாவடித்தெருவில் திருக்குறள் ஒப்புவித்தல், எழுதுதல் போட்டிகள் நடத்தியதில் மாணவர்கள் ஆர்வமுடன்

பங்கேற்றனர்.

தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்ற இப் போட்டிகளில் சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெண்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News