கோவையில் 17-ந் தேதி நடைபெறவுள்ள ஜவுளி தொழில் முனைவோர்கள் கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும்
- கோவையில் வருகிற 17ந் தேதி நடைபெறவுள்ள ஜவுளி தொழில் முனை வோர்கள் கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய வேண்டும்.
- ஜவுளி தொழில் முனை வோர்கள் கலந்து கொள்ளலாம்,
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
இந்தியாவில் துணிநூல் மற்றும் ஆயத்த ஆடைகள் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்க ளிப்பு வழங்குகின்றன. தொழில்நுட்ப ஜவுளித்துறை ஆண்டிற்கு 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடை யும் என்றும், 2030ஆம் ஆண்டிற்குள் சந்தை மதிப் பில் 45 பில்லியன் அமெ ரிக்க டாலர் அளவிற்கு உயரும் என எதிர் பார்க்கப்ப டுகிறது.
நமது நாட்டில் தொழில் நுட்ப ஜவுளித்துறை நேரடி யாக 12 லட்சம் நபர்களுக்கு, மறைமுகமாக 50 லட்சம் நபர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.
இந்திய தொழில் கூட்ட மைப்பு மூலமாக வருகிற 17ம் தேதியன்று, கோவையில் உள்ள ஹோட்டல் லீமெரிடி யனில் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, மத்திய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து தொழில் நுட்ப ஜவுளி கருத்தரங்கம் நடத்த உள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுனர்கள் தொழில் நுட்ப ஜவுளித் துறையில் உள்ள வாய்ப்புகள், வளர்ச்சி, புதிய முதலீடுகள், பன்னாட்டு சந்தை மற்றும் அதனுடைய போக்குகள் குறித்து கலந்து ரையாடல்கள் நடக்க உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்கு முன்ப திவு செய்வதற்கான இணை யதள இணைப்பு (https://bit.ly/CIITechnicalTextiles) மேற்படி கருத்தரங்கில் ஜவுளி தொழில் முனை வோர்கள் கலந்து கொள்ள லாம். மேலும் விவரங்களுக்கு, மண்டல துணை இயக்குனர், அம்சவேணி, மண்டல துணை இயக்குனர் அலுவல கம், துணிநூல் துறை, சங்ககிரி மெயின்ரோடு குகை, சேலம் 636006, 0427 2913006 என்ற விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக் குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.